வெளிக்குள் வெளி
(Space in a space within)






கவிதைகள் (மற்றும் பிறஎழுத்துக்கள்)
(With a Cup of some English Poems and writings)


கல்லூரன்


(Pon Ganesh)


இப்போது நான் சொல்ல நினைப்பவை....

வாழ்வை நான் திட்டமிட்டதில்லை அது போல அதனை திட்டமிட முயன்று தோற்றதுமில்லை.
ஆயினும் அது அதன் வழியே நகர்ந்து செல்லும்
ஒழுங்கை நான்
ரசிக்கத் தொடங்கிய பொழுது
விருப்புகள் வெறுப்புகளாகி விடுவதும்
வெறுப்புகள் விருப்புகளாகி விடுவதும்
வாழ்வின் சுவடுகள் ஆகின்றன.
எதுவும்-எப்போதும்- எல்லாமும்.

சொல்லுவதும் சொல்ல நினைப்பதும்
சொல்லப் படுபவையும்
பார்ப்பதும் –பார்க்க நினைப்பதும்-பார்க்கப் படுபவைகளும்
அதே போன்று
கேட்பவைகள்- கேட்கநினைப்பவைகள்
கேட்கப் படுபவைகள்
வாழ்வை எப்போதும் அர்த்தப்படுத்தபவை
என நான் உணர்கிறேன்

வாழ்வை ஒரு அழகிய கனவாகப் பார்க்க முயல்பவன் நான்
ஏனெனில் நானும் இறுதியில் ஒரு கனவு என்பதால்..

எனது முதலாவது கவிதைத் தொகுதி 'வெளிக்குள் வெளி' என்பது எத்தனை பேருக்குத் தெரியும் என்பது எனக்குத் தெரியாது. கவிதைகளும் பண்டமாகிப்போன நமது அரசியல் சுழலில் எந்த ஆக்கிரமிப்புக்கும் நான் சிந்தனைகளைப் பதிபவன்.

இந்த வகையில் 'மனிதனாய் இருப்பதன் பெருவலி....' என்னும் எனது இரண்டாவது கவிதைத் தொகுதியை நான் வெளியிடஇருக்கிறேன இருக்கிறேன் இப்பொழுது எனது முதலாவது கவிதைத் தொகுதியின் கவிதைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன



சமர்ப்பணம்



வெற்றுத்தாளின்
வெறுமைச்சித்திரமா நீ
இல்லை இல்லவே இல்லை
அசையாதகோடுகளினாலும்
கேட்காத குரல்களினாலும்
ஆனவன் நீ எனக்கு எப்போதும;.

என் தந்தை
இளையதம்பி அய்யர். பொன்னையா
அவர்களின் நினைவாக……






என்கவிதைகள் தொடங்கும் இடம்

கடவுள் ஒருவர் இருக்கிறார் என்று சொன்னார்கள் நான் நம்பினேன். அவரின் மகிழ்சியின் பொருட்டு மாமிசத்தைவெறுத்தேன்.நெற்றியில் திருநீறு பூசிக்கொள்ளவும் காதில் பூவைத்துக்கொள்ளவும் பழகினேன். ஒரு குறுகிய அறைக்குள் கற்பூரங்களுடன் ஊதுபத்திகள் மணத்துடன் அவர் எனது சிறையில் இருந்தார்.

அவரை விடுதலை செய்யுங்கள்
அவரை விடுதலை செய்யுங்கள்


கார்ல் மாக் தனது தோழர்களுடனும்; லெனின் தனது தோழர்களுடனும் என் வாசலை மறைத்தனர். எனது தேவர்கள் எனது கனவிலிருந்து துரத்தப்பட்டனர்.நான் ஆகாயமும் நிலமும் இல்லாமல் இடைநடுவில்.

நான் யார்
நான் யார்
எதற்குள் என் இருப்பு

ஏழைகள் தெரிந்தார்கள் பாவாத்மக்களை காணவில்லை ஏற்றுக்கொண்டேன்.
எனது கடவுளர்கள் யாவரும் பேசாத வெறும் சிலைகள் ஆகினர்
கோடுக்ளைத் தாண்டுதல் குதூகலம் தந்தது வயல்காட்டு நன்பர்களுடன், வியட்நாம் வீரர்களுடன் இருந்தேன் கஸ்ரோ கழுத்தில்; மாலையுடனும் தொப்பியுடனும் சேகுவரா கைகுலுக்கினார்.
நான் ஆகாயத்தில் மிதந்தேன்.

திடீர் என இதயம் நடுங்கிற்று
எங்கும் தீச்சுவாலைகள்
வீடுகள் பற்றி எரிந்தன
புல்வெளிகள் எரிந்தன
மனிதர்கள் எரிந்தனர்
மரங்கள் எரிந்தன
துப்பாக்கிக்குண்டு துளைத்த
புpணங்களில் என்னோடு வயல்
காட்டீல் இருந்தவனின் தம்பியும்
ஒருவன்.

அவனை பிடியுங்கள்
அவனைப்பிடியுங்கள்
கூக்குரலிட்ட கும்பலில் என் வயல்
காட்டுத்தோழர்களும் இருந்தனர்.
பூட்டியிருந்த பெட்டிக்குள் அடுக்கியிருந்த
அடையாளங்களை ஒவ்வொன்றாகச்
செருகினார்கள் நான் நடுங்கினேன்.
தலை தெறிக்க ஓடினேன்.
அவனைப்பிடியுங்கள்
அவனைப்பிடியுங்கள்.


எனது அடையாளம் பொறித்த ஒருவன் தான்
துப்பாக்கியால் சுட்டதாக கூறினர்.
எனக்கு மீண்டும் ஒரு மரணம்
நிகழ்ந்தது.
என் புதைகுழிகள்
ஓவ்வொன்றாகத்திறந்து கொண்டன.
கண்ணை மெல்ல விழித்தேன்
அம்மனிதன் என்னை மெல்ல நிமிர்த்தி
அணைத்து தண்ணீர் பருகினான்
என் கண்கள் பனித்தன.

எங்கே என் சிவப்பு நிறத்தோழர்கள்?
நான் யார்
நான் யார்

துப்பாக்கிகள் எங்கும் முளைத்தன
துப்பாக்கிகள் எங்கும் வெடித்தன
ஆகாயத்தை அளந்து
நுட்சத்திரங்கள் கணக்கிடப்பட்டன.

தலைவர்கள் பலர் சுவரில் மாட்டப்பட்டனர்
மலர் மாலைகளுடன்.
மீண்டும் நான் தொடங்கிய இடத்தில்


எப்புயலின் தாக்குதலிலும் பலம்
பெறும் இனி என் பயணம்.
அது ஒரு சங்கீதத்தின் கர்ச்சனையுடன்;;
எவரும் அத்துமீறாத சமூகம்
இருக்கும் இடம் நோக்கி
அது.


புhதைகள் இல்லாத காடுகளின்
மகிழ்ச்சி. அதை விடவும்
ஆழமான கடலில் அந்தம்
நோக்கி.

ஆத்மா எனும் ஒரே அடையாளத்துடன்
நகர்கிறது எனது பயணம்.
இப்பயணத்தில் நான் சிந்துகின்ற
நான் உரோமம் சிலிக்கின்ற
கண்ணீர் துளிகள்
இக்கவிதைகள் கல்லூரன்



இல.07 ஆர் கே எம் வீதி
கல்முனை.
இலங்கை.



ஒரே முகம



சிரித்திருக்கும்
மலர்களைப்
போல நான்
யாருக்காகவும்
சோடித்துக்கொள்வதில்லை
இடுகாட்டிலும்
பூத்துக்கிடப்பேன்
எனது
ஒரே முகத்துடன்.


மீண்டும் மீண்டும்



எத்தனை தடவை
என் இதயத்தை நீ
குப்பைக்குள் வீசுவதும்
நான் மீண்டும் மீண்டும்
எடுத்து மாட்டடீக்கொள்வதும்
மென்னையானதன்றோ இதயம்

தெருவில்
வாகனங்களும் மனச்சாட்சியின்றி
மிதித்து துவைக்கின்றது
என் பகல் பொழுதுகளை
நாய்கள் குரைத்து குரைத்து
கிழிந்து தொங்குகிறது
என் இரவுப்பொழுதுகள்.

என் முற்றத்தில் பூத்த
மல்லிகை மலரின் புன்னகைகள்
எப்போதும் எனக்கு பெரிது
அழுது கிடக்கும் என் இதயத்தின்
காயங்களுக்கு
அவைகளை பூசுவேன்
மெது மெதுவாய்
மரங்களில்-செடீகளில்
இலைகளில்
நிறம் தீட்டீச்செல்லும்
அந்த அந்தி நேரத்துச் சுகம் போல
என்னை கிண்டல்செய்யட்டும்
எத்தனை விண்மீன்களாயினும்
நான்
வெட்கமின்றி மீண்டும் மீண்டும்
தோன்றும் நிலவுதான்



துயர் கொணர்ந்த பறவை



அவள் அனுப்பியிருந்த
நினைவு அலைகளில்
ஒரு தனித்த குருவி
என் எலும்பு கிளையில்
வந்து குந்தியது.

நானும் பேசவில்லை
அதுவும் பேசவில்லை
நீண்ட நாட்களின் பின்பு
அதன் வருகை.

என்கிளைகளில் துருவித்துருவி
துடித்து துடித்துக் கொத்தியது
நெஞ்சு நிரம்பியது
என் விழிகள் மூடிக்கொண்டன
நெஞ்சு நிரம்பியது.

வார்த்தைகள் முட்ட முட்ட
பாய்ந்து எறியும் அலைகள்
தரையில் தலையை முட்டி முட்டி
ஏமாந்து செல்கின்றன



விடுதலையும் விரோதமும்

தென்றலில் கோர்த்து
என்னிதயத்தில்
வேர்விட்டு பூத்த ரோசா மலர்களே
கிருபா ரஞ்சா

எனக்காக விமோசனம் தேடிப்புறப்பட்ட
தபசிகளின் சாபங்களுக்கே
பலியாகிப் போனீர்களே!

இதழ் இதழாகப் பிய்த்து
வீசப்பட்டீர்களா
அப்பாவிகள் நீங்கள்
என்னிடம் ஏது சாட்சியங்கள்?
வெடித்துச் சிதறும்
என் கண்ணீர்க் குழும்புகளைத் தவிர.

எந்தப் பூவின் கசக்குதல்களுக்கும்
கண்ணீர் சிந்துபவன்
உங்களை ஆணி அறைந்த
சிலுவையின் முன் மாத்திரம்
கல்லாக நிற்பதும் எவ்வாறு?

விமோசனம் எமக்குத் தேவைதான்
சுத்தமான கரங்களுடன் அவர்கள்
என் கதவுகளைத் தட்டட்டும்
என் இதயத்து வேர்களைப் பிய்த்து
எறிந்து பெறும் விமோசனம் எனக்கெதற்கு?
பித்துப் பிடித்தவர்கள்
சப்பித் தின்னட்டும்.

கானகம் செல்ல வழிவிடுங்கள் தோழர்களே
சிலுவையில் அறைபட்டுக் கிடக்கும்
எனது சின்னஞ் பூக்களை
நான் உயிர்ப்பிக்க வேண்டும்


மரித்துப் போன இலை



நான் ஒரு மரித்துப் போன இலை
உன்னை நோக்கிப் பறந்திருப்பேன்
ஒரு துள்ளும் மேகமாக இருந்திருந்தால்.

எல்லாத் தோழர்களும் வந்து சேரட்டும்
பின்பு உன்னை நான் கேட்பேன்
'அன்பை அன்புக்காக வைத்திருந்தாயா' என்று.
நிமிடங்கள் கட்டிகளாகி
பாரங்களாகி
என்னை சங்கிலியிட்டு விட்டன.

நான் தலை குனிந்து கொள்கிறேன்
என்னை உனது பிணத்தில்
எரியும் நெருப்பாக்கி வை
இறந்துபோன நினைவுகளை மீண்டும்
இப்பிரபஞ்சம் நோக்கி செலுத்திப் பார்

காய்ந்து சருகாகிப் போன இந்த இலை
ஒரு புதிய ஜனத்தை உயிர்ப்பிக்கக் கூடும்.
அவிந்து போன அடுப்பிலிருந்து
நெருப்புத் தெறிப்புக்களும் ஒளிரக் கூடும்
ஒரு மனித நேயத்துடன்
அதுவும் இந்தப் பாடலுடன்.

ஓ என் உயிர்க்காற்றே
உறை பனிக்காலம் வந்தால்
அவர்களைக் கேளுங்கள்
வசந்தம் இன்னும் தூரத்திலா உள்ளது?


விறைத்துப் போனவை



நீ உறுதியுடன் நீட்டிய கரம்
அக்கரத்தில்
என்னை நோக்கி பிடித்திருந்த
அப் பழுப்பு மஞ்சள் பழம்
வார்த்தை ஒன்றில்லாத கண்களில்
நானும் அத்தனை உறுதி.

என் இரவுகள் எதிலும்
கனவுகள் எதிலும்
தெரிவன அழிவுகள் மட்டுமே

நீயும் நானும்
ஆறுதல் அளிக்கும்
அக் கடல் விடுதியை நோக்கிய பயணத்தில்ளூ

நச்சுப் பாம்புடன்
ஆறுதல் அளிக்கும் பசுமை பயமுறுத்தும்
விறைத்துப் போன புல் வெளிகள்.

நிசப்தமாக உருளும் சக்கரங்கள்
பிண அமைதிளூ
கை தட்டி அழைக்கும் புதைகுழிக் கற்கள்ளூ
தகரத்திலானது போல் தெரிகின்ற ஆகாயம்ளூ
செம்பின் நிறத்தில் புலர்கிறது வசந்தம்.

தடித்துக் கெட்டியாகிப் போன
நரம்புகளாக
மரங்களும் செடிகளும்
எலும்புகளையும் மண்டை ஓடுகளையும்
கொளுத்திச் செல்கிறது சூரியக் கதிர்.

நீ
இதயத்துப் புண்ணொன்றை
மூடி மறைப்பது போல் இருக்கிறாய்
பின்னர்
காணாமல் போகிறாய்.

அறைகள் பற்றியும்
புன்னகைகள் பற்றியும்
அழகான செடிகள் பற்றியும்
கடலைப் பற்றியும்
இரக்கமற்ற விருந்தினர்கள்
பேசி திருப்தி அடைந்து கொள்ளளட்டும்

நான் இவைகளைத் தாங்கிக் கொள்கிறேன்
ஒரு வகைத் தொண்டு போலளூ
வெயிலில் ஒரு மனிதனைத் தூங்க வைக்க முடியுமா?
முடியுமெனில்
என்னை எப்போதும்
கிடத்திப் பார்க்கும் இடமும் அதுதான்

நான் கிடப்பேன்
ஒரு பிணத்தைப் போல
ஒரு பல்லயைப் போல


என் இரவுகள் எதிலும்
கனவுகள் எதிலும்
தெரிவன அழிவுகள் மட்டுமே


வெளிக்குள் வெளி



இன்னும் முடிவுறாதிருக்கும்
கணங்கள் சிலவற்றை
என் கைகளில் திணித்து
எல்லையற்ற பெருவெளியின்
மற்றுமொரு துண்டை என் கால்களில் அணிவித்து
எனக்குப் பெயரிட்டனர்
நான் மனிதன்.

சாமேள ஒலிகளிடை
எழும் அழுகுரல்களின் மத்தியில்
ஒரு பிற்பகல் நிறப் பொழுதில்
அல்லது சடுதியில்
ஒரு இளங்காலைப் பொழுதில்
எனது சுவர்கள் முத்திரை குத்தப்படும்
எனது பிணப் பெட்டியில்
ஆணி அறையப்படும்

அதுவரை
காற்றில்லாத ஒரு சிறு அறைக்குள்
நான் ஆத்மாவைச் சிறைப்பிடிக்கவும்
மரண வாழ்வில்
வெறும் கனவுகளைக் காணவும்
இன்னும் முயல்கிறேன்

காலத்தையும் வெளியையும் கடந்து
இதுவரை சூடியிருந்த
அடையாளங்கள் கரைந்து
நான் புறப்படும் பொழுது
ஒரு புல்லின் நுனி
ஒரு பூவின் இதழ்
அவைகளுக்கு அப்பால்
நான் வெளிக்குள் வெளி




இன்றும் எப்போதும்

கால எல்லைகளைக் கடந்து
வெளியில் நீல நிறம்
மூச்சு விடும் இலைகளின் பசுமை
என் முகத்தில்
வருட வரிகள்

யாவும் மிகப் பழமை
கண்ணில் குதிக்கும் களிபேருவகை
ஒப்பீடற்ற உண்மைகள்

ஒரு மூச்சின் நிறுத்தலில் சரியும்
நாட்கள் துயரில் தோயும்
ஒரு நடுநிலைக்காய் அவைந நகர
மகிழ்ச்சியான நாட்களும்
வருகை தரும்
துயரும் மகிழ்வும்
சுழன்று வரும் சில்லின்
அச்சாணி என மனம் ஆட்சி செய்யும்.

ஒவ்வொரு காலையும் புதிது
ஒவ்வொரு பனித்துளியும் புதிது புதிது
விணவெளியே
நீ எப்போதும் நீல நிறந்தான்
உயிர்ககும் இலைகளே
நீ எப்போதும் பசுமைதான்




நினைவுத் தணல்கள;



அள்ளிக் குவித்திருக்கும்
என் பிணத்தை
இனி உன் இதழ்கள் முத்தமிடாது
மூலைக்குள் முடங்கிய எனை நோக்கி
நீ இனி முகம் சுழிக்கத் தேவையில்லை
மீண்டும் மீணடும் நிகழ்ந்த நகர்வில்-

கால்களை இழந்த சோர்வு
ஓராயிரம் அற்ப விடயங்களில்
நின் விருப்புகளில்-
வெறுப்புகளில்-
கிழிந்து
அழுக்கடைந்து தொங்குகிறேன்.

கொடூரமான பிடிகளுக்குள்
இரவினூடு உன் முனடனால்
நான் நிறுத்தப் படுகையில்
கிழிந்து நழுவும் முண்டுகளாவேன்
உன் நிறைந்த சிந்தனைக்குள்
திணிக்கும் சோம்பல் பயங்கரத்துள்
நான் துயுலுகையில்
மூடப்படாத இமைகளுடன்-

இருளை
குளிரை
நின் காதல் உறுதியின்
வெளிப் புள்ளிகளை
நான் எதிர் கொளகிறேன்.

எந்த நடமாட்டமும் இல்லாத
ஒரு தெருவை மட்டும் எட்டிப் பார்ப்பேன்
இவ்வுலகை கடலோடு சேர்த்து
கைகளில் அடக்குதற்கு
எவ்வரமும் எனக்கில்லை.


என் தலைக்குள் வெடித்துச் சிதறியிருக்கும்
உன் நினைவுத் தணல்கள்
எங்கோ ஒரு மூலையில் எரிவன-
மொழிபெயர்க்க முடியாத
ஒரு சிறு கவிதை வரிகளாக-

முரூர அழுத்துதல்களுக்கும்
வெறுமையை நோக்கிய
கரிய எதிர் முயற்சிக்கும் இடையே
என் இருட்திரை தடிக்கும்
முனை மழுங்கிய ஒரு விசாரணைக்கு
நீ என்னை அழைத்துச் செல்கையில்
என் இருட்திரை தடிக்கும்


ஓரு கடைசிப் பனித்துளிக்கு



கற்களை அளந்து அடுக்கும்
கருவிகள் என்னிடம் இல்லை
கம்பிகளுடனும் சீமந்து கலவைகளுடனும்
வெறும் மண்மூட்டைகளுடனும்
நான் பேசியதில்லை
பேசினால்
நிச்சயம் அவைகள் சிரித்துக் கொள்ளும்.
உனைப்போல.

பாதம் பதிந்திருக்கும்
இம் மண் உன்னுடையது
அதன் கீழே எனக்குத் தெரிவது
அழகிய நீரோடை
மேலே உள்ளது
அகன்ற விண்வெளி.
யாருடையதும்.
அதற்கப்பால் எனக்குத் தெரிவன
நட்சேத்திரங்களும் நிலவுகளும்
இடையில் வெறும் வெட்டவெளி.

உனது பொய்ப் பற்கள் பொய்க் கால்கள்
தலையில் நரைத்துள்ளன
கல்லும் மண்ணும் கம்பியும்
கொண்ட நின் கொங்கிறீட் விரூட்சங்கள்
எனக்குப் பெரிதல்ல
இயந்திரங்கள் கூக்குரலுடும்-

புழுதிகளில்
ஒரு கோணிக் கடைச் சிப்பந்திகளின்
தலைகளில்
முகங்களில்
படிந்த தூசிகளில்
முடிந்தும் முடியாதுமான
ஒரு புதுக்கட்டிட விருட்சத்து
மூலைகளில்
அழுது கிடக்கும் அனாதைப் புற்களுடன்
எனக்கு சினேகம்
ஆயிரம் வார்த்தைகளில்

வேண்டுமானால் சிரித்துக் கொள்
தலையில் கவிந்திருக்கும்
உன் வெண் பஞ்சு மேகத்திரள்
எனக்கு எப்போதும் பெரிது
ஏனெனில்
யாரும் கழிப்பறைக்கு போவதை நான்
கற்பனை செய்வதில்லை


ஆனந்தன் நினைவாக.....


நிற வெடிப்பிலிருந்து
உயிர் ஒழுக ஒழுகளூ
சிரசு படிப்படியாக கவிழ்ந்து கொள்ள
ஒரு இடிமுழக்கத்தின்
முதலாவது மழைத்துளியாக
ஒவ்வொன்றும் மிகப் பாரமுடன்
அழுத்தமுடன் இதயத்துள் வீழ்கிறது
மிக வலி.

ஒரு புல்லின் நுனியிலும்
குடியிருந்தான் ஆனந்தன்
ஆண்மை பொருந்திய
கவிதை நுழைந்திருந்த
அவன் கண் புருவங்கள்
எனக்குச் சொல்லிற்று

நீலச் சமுத்திரமே
உருள்க நீ மீண்டும் உருள்க
கொலைகள் குருதி நீராவியைச் சுவாசிக்கும்
இடம் இது
ரீங்காரம் பாடும் தேசங்கள்
அதன் வழியே நனைந்து
உறுமும் இடமும் இ. . தே.

அவனது கண்கள்
அவனது இதயத்துடன்
எங்கோ ஒரு இடத்தில்
கொழுத்தியிருக்கிறது.

தொலைந்துபோன வாழ்வு பற்றி
நீ கவலைப் பட்டாயா ஆனந்தா

கரு நீலச் சமுத்திரமே
உருள்க நீ மீண்டும் உருள்க

ஆனந்தா
அரைவாசியில் உன் பயணம்
துறைமுகத்திலிருந்து சிறிது தூரம்
கசந்துபோன மாம்பழத் தோப்பிலிருந்து
சிறிது தூரம்
யாருக்காகவோ
கருத்துப் போன ஆடைகளுடன்
அழுது கொண்டு எப்போதும்.

மனித நாசத்தை
எம்மீது படரவிட்டவர்கள்
மகிழ்ச்சி கொள்ளட்டும்
போர் யானைகளுக்கு மத்தியில்
ஒரு பூநொருங்கிப் போனதென்று.

(கொல்லப் பட்ட ஒரு நண்பனின் நினைவாக..)

மூடப்படுவதற்கு முன்பாக..



பிடரியில் குதி அடிபட
நான் இளைத்து இளைத்து
துரத்திக் கொண்டு ஓடுவது எதனை?
அவைகள் வெறும் நிழல்களாக
என்னோடு இருந்து
என்னோடு சிரித்து
என்னோடு மகிழ்ந்தவர்கள்.

நான் அழும் பொழுது மட்டும்
நடு உச்சியில் சூரியன்
வந்து விடுகிறது
சரிந்து சூரியன் விழும்வரை
நான் காத்திருக்க வேண்டுமாம்ளூ
மீண்டும் அந் நிழல்களை
துரத்திக் கொண்டு ஓடுவதற்கு.

நாலு கைகளும் கால்களும்
படைத்து வைத்திருக்கிறது
எனக்கு
இந்த நகரத்து வனாந்தரம்

யாரும் உமிழ்ந்து விட்டுப் போகட்டும்

இப்பொழுது மூடப்படாத
சவக் கிடங்குள் எனது பிணம்
வெறும் உதுபத்திகளில்
மணத்துக் கொண்டிருக்கிறேன்
காகிதப்பூக்களில்
அவ்வப் பொழுது அஞ்சலிகள்
மரணத்தில் கதறி அழுவதற்கு மட்டும்
உறவினர்கள்

காக்கைகள் காத்திருக்கட்டும
என் கண்களை பிடுங்கிக் கொள்வதற்கு
நாய்களும் தான்
புதைத்ததும் இழுத்துக் குதறுவதற்கு.

ஆயினும் என்ன
அதோ நிலாவிலிருந்து வடிகிறது
என் துயரம் கடலுக்குள்.
அவற்றை காற்றோடு கலந்து
கவிதைகளாக்கி ஆர்ப்பரிக்கின்றன
கடலலைகள்.


வாழ்வும் நிழலும்.



எப்படி மறப்பது அத்தெருவை
அப் பூவரசு இன்னும் முகரும்
எனது நினைவுகளை
பழுத்துப் போன இலைகளுடன்ளூ
உரோமம் சிலிர்க்க
ஒரு பெரும் பள்ளத்திலிருந்து
நினைவுகள் உயி;ர்க்க
நெஞ்சுள் பெருவலி – எரிகிறது.

ஒட்டுவிறாந்தையில்
மடிமீது என் தலையைப் பிடித்து
உலுப்புகிறது நிலவு.

இன்னும் நேசிக்கிறாயா
இன்னும் நேசிக்கிறாயா

வாழ்வில் ஒரு நிழல் மட்டுமா
சூரியனின் கீழ்
மரங்கூடத் தருகிறதே நிழலை.
வெறும் மரமும் அதன் நிழலுமா வாழ்வு?
இல்லை அன்பே.

இல்லையெனில்
அத்தெருவில் நான் பதித்த சுவடுகள்
இன்னும் நெஞ்சுள் வலி எடுப்பதும் ஏன்?
இல்லையெனில்
அவ்வருடங்கள்
ஓங்கி ஓங்கி அறைவதும் ஏன்?
இல்லையெனில்
இப்பேரண்டத்தை நோக்கி
செடிகள் நிமிர்வதும் ஏன்?
வானத்தை நோக்கி
மலர்கள் புன்னகைப்பதும் ஏன்?

ஒரு ஒளி வெள்ளத்தில்
வாழ்வு மரணத்தின் நிழலாகவும் ஒளிர்கிறதே!
வெறும் மரமல்ல வாழ்வு
வெறும் நிழல்ல வாழ்வு
அது ஒரு பெருங்கனவு!

மரம் வீழினும்
நிழல் மறையினும்
வாழ்வு பாடுகிறது இப் பேரண்டம் முழுவதும்.

ஒரு படை வீரனுடன்.



அந்த நகரத்துச்சந்தியில்
நின்றிருந்தான்
ஒரு படைவீரன் சிலையாக

எந்த சூரியன் அனல் கக்கியென்ன
எந்தகுளிர்காற்று வீசினும் என்ன?
அவனைப்போல
நீ எனக்கு ஒரு இளைஞன் மட்டுமே.
காதல் பசும் புல்வெளிகளில்

பனிப்புகார்களாய்
மிதந்து திரியவும்
சிட்டுக்குருவிகளாய்
தெருக்களில் சீட்டியடித்துத் திரியவும்
உனக்கும் தெரியாமலா இருந்தது ?

எங்கிருந்தோ வந்த போர்க்
கழுகுகளின் மேச்சலில்
அவன் காணாமல் போனான்.

ஓஇ சின்னஞ்சிறு படைவீரனே
எனக்குள் இன்னும் தகிக்கின்றது
நெருப்பாக அணையாத நெருப்பாக
நீ மட்டும் என் கண்ணெதிரே
ஒரு சிலையாகவேனும் சிரிக்கிறாய்.

மூன்றாவது கட்டில்



வெளியில் நிலமை சரியில்லை
என்றார்கள்
வீடு செல்ல முடியவில்லை.
வேற்று மனிதர் சிலருடன் தான்
கடைசி பஸ் போனது.

ஒரு கட்டிடத்துள் வந்தேன்
குரல் மட்டும் கேட்டது
முகம் புலப்படவில்லை
தன் முகம் தனக்குத்தெரிவதெவ்வாறு
என் முகம் தானோ அது?

அது ஒரு பழைய வைத்தியசாலை
கால்கள் நெளிந்து
இரு கட்டில்கள்
மனமின்றி இணைந்த மனிதர்கள் போல
சற்று அப்பால்
தனித்து மூன்றாவது கட்டில்
அதில் நீட்டி நிமிர்ந்து
கிடத்தப்பட்டிருக்கிறது
எனது பிணம்.


ஓட்டமெடுக்கிறேன்
ஓட்டமெடுக்கிறேன்
தாளிட்ட கதவுகளில்
ஒரு குருட்டு வெளவாலாக
மோதி விழுகிறேன்
அவ்விரு கட்டில்களிலும்
கிடத்தப்பட்டிருப்பது
எனது பிணம் தானா எப்படி புதிதாக..?

கண் விழித்தேன்
கைகள் அசைந்தன
கால்கள் அசைந்தன
சுவாசம் தெரிந்தது
எனது பிணம்
உயிர்த்து சிலிர்க்கிறது நானாக.


இன்று நான்



இன்று கடலலைகள்
நேற்றுப்போல் குதூகலமாய் இல்லை
இதே மாலை நேரம்
இதே காற்றுத்தான் வீசியது
நிலவும் ஏன் குந்தியிருக்கிறது
அதே சீருடையில்.?

வெறித்தேன் ஒரு வெறும் புன்னகை
எப்போதோ தைத்திருந்த
கொப்புளம் பழுத்து சீழ் வடிந்து
வலிக்கிறது
எப்போதோ இங்கு
அihகுறையாய் எரிந்து
அனாதையாய் கிடந்த
நண்பன் ஒருவனின் பிணத்தை
காகங்கள் கொத்தி தின்றன.
இன்று மட்டும் ஏன் இக் கடலலைகள்
குதூகலமாய் இல்லை?

எப்போதும் இல்லை எதுவும் ஒரே விதமாய்
எனக்கென ஒரு கடலும் அலைகளும்
உனக்கென ஒரு கடலும் அலைகளும்
எவ்வித சமாதான அழைப்புக்களையும்
விடுத்து
ஒன்றையொன்று விரோதிக்கின்றன
எனக்கொரு வெயிலும் நிழலும்
உனக்கொரு நிழலும் வெயிலும்.

மரங்களை விடுத்து
இலைகளை விடுத்து
குலுங்கி சிரித்து செல்கிறது
காற்று ஒரு புளங்காங்கிதத்துடன்ளூ
என்னையும் எனது பார்வையையும்
அப்படியே தனித்து விடுத்து
அக்கடலுடனும் அலைகளுடனும்
இன்று நான்.


அடையாளம்



களைந்து விட முடியாத
எத்தனை போர்வைக்குள்
நான் அவிந்து வியப்பது
சமயத்தில்
என்னுள் முகிழும்
அழகிய மெல்லிய சிற்பங்களும்
களவு போய்விடுகிறன.

உடல் உறையும் பனியிலும்
உயிர் பொசுங்கும் உஸ்ணத்திலும்
நான்
எதையாவது உடுத்திகிகொள்ளத்தான்
வேண்டும்.

அவ்வுறை பனியும்
அவ்வுஸ்ணமும்
தொடமுடியாத இடத்தில்
நான் சுவாசிப்பதும் எவ்வாறு?



எல்லாம் முடிந்த பின்பும்



என் நெஞ்சுள்
தீட்சண்யமான
அக்கண்கள்
கொழுத்த நினைத்தது எதனை?

எல்லாம் எரிந்து சாம்பலான பின்புளூ
எல்லோரும் இங்கிருந்து புற்பட்டுச் சென்ற பின்புளூ

பாறையாகிப் போன பின்-
ஒரு மாரியின் குளிர்மையும் ஒன்றுதான்
ஒரு கொடிய கோடையின்
தணலும் ஒன்றுதான்

என் நெஞ்சுள்
தீட்சண்யமான
அக்கண்கள்
கொழுத்த நினைத்தது எதனை?


TEACH ME TO CARE, NOT TO CARE



கரை ஒதுங்கிற்று
மனிதப் பிண்டங்கள்
தலைகளின்றிளூ
என் தலையைப் பொருத்தி
அதிர்ந்து கொள்வதும் - நான்ளூ
அழுது கண்ணீர் வடிப்பதும்.

பின்னர்-
நீயும் உன் தலையைப் பொருத்தி
அதிர்ந்து கொள்வதும்
கண்ணீர் சிந்தி நீ
என்னை நொந்துகொள்வதும்ளூ

எங்கு நான் கற்றுக் கொள்வது நண்பனே-
என் பேரன்பை செலுத்தவும்
அல்லது
அப் பேரன்பை மறைப்பதும்
அல்லது
அப்படியே ஒரு கல்லைப் போல் கிடக்கவும்.


Tribute to a feminist.

எந்த ஏதன் தோட்டத்திலிருந்து
புறப்பட்டனள்
எமது ஆண்டவர் படைத்த
இப் புதிய ஏவாள்.

பெயரிடப் படாத நதிகளிலிருந்தும்
பெயரிடப் படாத
கடல் அலைகளிலிருந்தும்
இவள் புறப்பட்டாளெனில்ளூ
பிதாவே
இவளை மன்னித்தருள்க

இவள் சேலை உடுத்திருந்ததுவும்
பின்பொரு தடைவ
கால்கள் தெரிய
சட்டை அணிந்திருந்தவும்
எனக்கு ஞாபகம்

எனக்கு மட்டும் புலப்படும்
ஒரு சூரியனின் உஸ்ணத்தில்
என் போர்வைகளும்
வியர்த்துக் கொட்டுவனவே

ஆயினும்
நின் பாதம் பதிந்திருக்கும்
மண்ணை இழிந்து
எப் புதிய பனிப் புகார் நோக்கி
நீயும் புறப்பட்டனை?
அதுவும் உடலில் ஒரு துணியுமின்றிளூ

என்னால் உமிழ முடியவில்லை
என்னால் உவக்க முடியவில்லை


(நண்பன் ஒருவன் ஒரு பெண்ணின் நிர்வாணப் படத்தை அனுப்பி கவிதை ஒன்று எழுதி அனுப்புமாறு கேட்டிருந்தான்)



,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,


Book Review:

Tamil and English Poems
Velikkul veli (Space in a space within)

By Kallooran
Publishers ‘View-Gum’
Publications
Price: Rs.75
Review : By K.Kunarajah


Kallooran(the pen-name of Ponnaiah Ganeshan) also as Pon-Ganesh’ has brought forth a
book of poems under the title of ‘Velikkul Veli’ which means a space in a space within. It has been published by View-Gum a quarterly magazine only known among serious Tamil Literary limited circles.

The collection of poems contains 29 Tamil & 5 English poems. He declares about “the point from where his poems begin” that his goal as journeying beyond time and space losing all his identities. And he says, he is only journeying with a soul of his own. The poet has had close contact with the JVP comrades during the year 1978 and he was greatly disappointed and dissatisfied with their activities. He symbolizes Karl Marx, Lenin and Castro only to convey that he was much interested in communist philosophy and that he lost faith in it due to chauvinistic activities of the so-called comrades. So he states in the Free-verse like prose which speaks of the point from where his poems begin.

Kallooran says in one of his English poems,

“I am given an animal’s name
In a land of people
For I am taught to see
Only my fame
In Newspapers, over Radio
and on television,
In kitchen
Even in toilets
I look for my name in vain”

In a Tamil poem, he says,

“A death only with a few leaves of life
And a life with some dead thorns of death
Scare crows are made alive;
With my death and life
With his life and death”

Kallooran in his anguished exploration of his humanness, tries to show:

“Journeying beyond time and space
Depriving of all my identities crowned,
I am out in a space within
All beyond the blade of a grass
All beyond the blade of a flower”

On the whole, the poems of Kallooran, are so impressive to the extent that they cannot simply be set aside. The book is available at Pooplasingam Book Depot, Sea Street, Colombo

(Ceylon Daily News dated 21.01.2000)

THE HEART THROWN INTO A DUSTBIN

Why do you throw my heart away
Into a dustbin
Again and again
And I am to pick it up
Many a times.

Why do you throw my heart
Into a dustbin ?
And break my hands
That I stretch towards you.

I always love the flowers
Blossomed in my garden
Treasured and chiseled in my chest
They are as large as this universe.
If you are not loving me
Tell me now, I’ll go away
But with the glories of my love
Of the beautiful flowers.

Do you listen to my sorrow notes
Of my heart lying poor in the dustbin?
Do you hear my word of love
Once I wisphered in to your ears?

That which we existed
That which we have been existing
Are all in us.
It is you who throw my heart away
Into a dustbin.

If you are not loving me
Tell me I am gone
And if you received a word of lovef from you
Any time even after my death
I will raise from ashes
And show you the citadel of my love
Built in my chest for you dear for ever.

Still I Love you

I am as dead, my dear neighbor
Come, see
My house and garden
And temple all in ashes
The temple I visit every Friday
Offering flowers and sweets
were thrown in fire
And laid trodden on boot and feet
My gods absconded
Leaving their Vels and other
Weapons with us.

I am as dead,
Don’t you feel sad for me
My dear neighbor?
You do I am sure
My blood and tears
Will melt this iron earth
And why not yours?

Do you remember
My neighbor
My sand coloured cat
The dog which wags his tail
Whenever you come
The green grass and moss
Spread on the garden
It is burnt
It is all burnt to ashes.

I heard you came
Along with khakis
Danced fiercely on borrowed
Cliches
And with arms and bombs
Isn’t it a shame?

For years and years
We lived together
Joying joys.

I love a land
of peace and justice
You, my dear neighbor
Not to fall prey al other’s hand.

Still I love you my neighbor
Still I love you my neighbor


My heart already pieced and
In pain
Yo too,
Not to set fire to my heart again.


Space in a space within.

Thrusting into my hands
A little of the never ending time
And a pice of boudless ether
Into my feet
I am named as human.

Amids cries and tears by kiths and
My kins
Amids the funeral beating
In the colour of an afternoon
Or suddently
In the colour of a morning
I am gone and my walls
Are sealed
My coffin nailed.

Still then
I carry loads of void dreams
Arresting my atman in a small
Room airless
Playing with my usual toys
Clay-made
And journeying by false’s shade.

Journeying beyond time and space
Depriving of all my identies crowned
I am out in a space within
All beyond the blade of a grass
All beyond the balde of a flower.


HOPE

Built a house of mine
With my tears and blood
For a man to emerge:

Sang a song of mine
With flute made of my flesh and bones
For a man to listen;

The sun came only to burn
The man came only to tear
My house and my songs;

Yet, I, as a chanter of pains and joys
Do believe,
The sun has rays to shine
The man has a heart to pine
For me and those yet to be born.


Under One Sun

I live in an alien land
With alien tongue
No one understands.

A broom stick amids half-swept debris
A lonely corpse in a coffin
With its front teeth
Slightly projected.
A plate of rice with curry
On a broken table half eaten
I live in an alienland
My tongue, no one understands.

I am given an animal’s name
In a land of people
For I am taught to see
only my fame
In newspapers, over radio
And on television
Even in kitchen
I look for my name in vain.
Place my name
In your plate of rice
Place my name
In the book of your grievence
And your triumphs as well.

Yet I live in an alien land
With my alien tongue
Let me live in a land of humans
And for a heart I pray
To read in my script, a name thine
And you, in yours, mine
Shall our stars in the sky shine
Under one sun again?


UNDER ONE SUN

I live in an alien land
With an alien tongue
No one understands

A broom stick amidst half-sweft debris
A lonely corpse in a coffin
With front teen slightly projected
A place of rice with curry
On a broken table, half eaten
I live in an alien land My tongue, no one understands

I am given an animal’s name
In a land of people
For I am taught to see
Only my fame
In newspapers, over radio
And television
In kitchen
Even in toilet
I look for my name in vain

Place my name in your plate of rice
Place my name in our morning cup of tea
Place my name
In the book of your grievances
And your triumphs as well

Yet, I live in an alien land
With an alien tongue
Let me live in a land of humans
And for heart, I pray
To read in my script, a name thine
And you in your, mine
Shall our stars in the sky shine
Under one sun again.




MY DEAR FELLOW MAN

In what container
Do you want to weigh me
After mutilating hands and legs
Clipping of fingers
And severing my head
What is poured here
Is nothing but blood and blood
My fellow man.

How many outfits you wear
Heavy and struggling to bear

I don’t like to alight my eyes on you
Go back and come with your real self
Go back and come with the languages of heart
Go back and come being resurrected
Out of ashes of all man made differences
Burnt.

Is life
Grubbing, slumbering and squatting
And then vanishing

Is life
A mere pot of boiled rice
For you to measure out
With a small spoon
And me to receive it

Who knows my woes
My fellow man,
You thrust so relentlessly
All yours on me
I, being deprived of all rights to resent.

From life upon life
Deep and serene
With multitudes of genesis
Packed upon, I should quench
At least a drop
Out of the vast ocean of this life.

Like the blooming
Red shoe flower with its
Dewdrop wet
In the color of my very blood.

- PON GANESH

MY BOOK

MY BOOK